Saturday 4th of May 2024 11:37:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜப்பான் புதிய பிரதமராக  யோஷிஹைட் சுகா  தெரிவானார்!

ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவானார்!


ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நேற்று தெரிவானார். எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரை அவா் இந்தப் பதவியில் நீடிப்பார்.

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருக்கும் 71 வயதான யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கூடிய ஜப்பான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்று பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார்.

இதேவேளை, பிரதமராகத் தெரிவாகியுள்ள யோஷிஹைட் சுகா உடனடியாக அமைச்சரவையில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் எந்த மாற்றங்களையும் இவா் செய்யமாட்டார் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமராகத் தெரிவான பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட யோஷிஹைட் சுகா, நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடும் எனத் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE